மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

மீண்டும் எதிர்ப்பு : வலுக்கும் ஆதரவு!

மீண்டும் எதிர்ப்பு : வலுக்கும் ஆதரவு!

ஜூலை 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், “தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் இருக்கிறது’’ என்று குற்றம்சாட்டினார். இதைக் கண்டிக்கும் விதமாக அதிமுக அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி. சண்முகம் ஆகியோர் கண்டன ம் தெரிவித்தார்கள். இந்நிலையில், “தமிழக ஆட்சியின் அவலத்தை வெளிப்படுத்த கமல்ஹாசன் உள்ளிட்ட வாக்களித்த அனைவருக் கும் உரிமை உண்டு” என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதற்கு கமல்ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் கமலஹாசனை விமர்சித்துள்ளார்கள். அமைச்சர் ஜெயகுமார் இன்று(17.7.2017) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும். தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும். கமல் கூறும் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பதில் மட்டுமே கூறுகின்றனர். திமுக கமல்ஹாசனுக்கு ஆதரவளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. திமுகவுக்கு கமல்ஹாசன் உதவி தேவைப்படுவதால், ஸ்டாலின் ஆதரவாக பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், “திமுக ஆட்சியில் இருந்த போது நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று அஜித் குமார் பேசியபோது கமல்ஹாசன் எங்கு சென்றார் என்று கேள்வி எழுப்பினார் சி.வி. சண்முகம்.

ஆதரவு

இந்நிலையில் ஓ.பிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.“கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில் கூற வேண்டுமே தவிர அவரைக் குறை கூறக்கூடாது. கமலைக் குறை சொன்னால் அவர்களது மதிப்பு தான் குறையும்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று(16.7.2017) வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் சிவாஜிக்கு பிறகு கலையுலகில் தலைசிறந்த நடிகர் என்ற இடத்தில் கமலஹாசன் உள்ளார். கமல் உட்பட யாருக்கும் கருத்துச்சொல்ல உரிமை உண்டு. கருத்துச்சொல்லும் கமல் மீது அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்குவதும், எச்சரிக்கை செய்வதும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அமைச்சர்களின் பேச்சு நாகரீகமற்றது. இதுபோல பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon