மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

காஜல் அகர்வாலிடம் மூன்று கேள்விகள்?

காஜல் அகர்வாலிடம் மூன்று கேள்விகள்?

காஜல் அகர்வால் தனது மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து படங்களுக்கு கால்ஷீட்டைக் கொடுத்து அதில் பெரும்பாலான படங்களை முடித்துவிட்டார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய் - அஜித்துடன், காஜல் நடித்த மெர்சல் - விவேகம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் முடிந்துவிட்டன. தெலுங்கில் நடிக்கும் எம்.எல்.ஏ திரைப்படம் மட்டும் படப்பிடிப்பு மீதி இருக்கிறது.

எத்தனை வேலைகள் இருந்தாலும், தனது காதல் அழைக்கும்போது தவிர்த்துவிடமுடியாதல்லவா? விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையி றுதி ஆட்டம் லண்டனில் நேற்று(06.07.17) நடைபெற்று முடிந்தது. இந்தப்போட்டியைக்காண காஜல் அகர்வால் நேரில் சென்று நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் கலந்துகொண்டு ஆரவாரம் செய்தார். அவரை அடையாளம்கண்டு அங்கேயே பிடித்து மூன்று கேள்விகளைக் கேட்டது மீடியா, நேரமில்லை என்று காஜல் சொன்னதால் சின்னச் சின்ன கேள்விகளாக அமைந்த அந்த மூன்று கேள்விகள்...

பிடித்தது சச்சினா? லியாண்டர் பெயஸா?

பிடித்தது ஸ்போர்ட்ஸ் திரைப்படமா? ரொமாண்டிக் காமெடி திரைப்படமா?

கிரிக்கெட்டா? டென்னிஸா?

இந்தக் கேள்விகளுக்கு, சச்சினைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் அவர் கிரிக்கெட்டின் கடவுள். ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களைப் பார்ப்பதற்குப் பிடிக்கும். ஆனால், நடிப்பதென்றால் ரொமாண்டிக் காமெடி கலந்த படங்கள்தான். கிரிக்கெட்தான் இந்தியாவில் அதிகமாக விளையாடப்படுகிறது. அதனால் கிரிக்கெட்டைப் பார்ப்பேன். ஆனால், டென்னிஸ் பார்க்கும்போது இருக்கும் மகிழ்ச்சியே வேறு என்று கூறினார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon