மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

தோனியே காரணம்: ரஹானே பெருமிதம்!

தோனியே காரணம்: ரஹானே பெருமிதம்!

இந்திய அணியின் கேப்டனாக பல்வேறு வீரர்கள் பணியாற்றி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற ஒருவராகச் சிறந்த கேப்டனாக திகழ்ந்து வருபவர் தோனி. இவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.

தற்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலிக்கு, தகுந்த ஆலோசனைக் கூறி வருகிறார் தோனி. இதனால் விராட் கோலியின் கேப்டன் பணி எளிதாகியுள்ளது என்று டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரஹானே நேற்று (ஜூலை 16) இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து ரஹானே கூறுகையில் தோனி அணியில் ஒருவராக இருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் எங்களுடன் இருப்பது எங்களின் அதிர்ஷ்டம். விராட் கோலியுடன் தோனி இருப்பது, அவரின் கேப்டன் பொறுப்பை மிகவும் எளிதாக மாற்றுகிறது. பல இடங்களில் விராட் கோலி தோனியிடம் சென்று ஆலோசனைக் கேட்கிறார். அவரின் சிறப்பான ஆலோசனைகளே கோலியின் கேப்டன் திறனுக்கு காரணம். இருவரும் இணைந்து பணியாற்றுவதை பார்ப்பதற்குச் சிறப்பாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon