மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

தமன்னாவை முந்திய ஹன்சிகா

தமன்னாவை முந்திய  ஹன்சிகா

ஜெயம்ரவி, அர்விந்தசாமி ஆகியோருடன் இணைந்து நடித்த `போகன்' படத்திற்குப் பிறகு என்ன காரணமோ ஹன்சிகாவுக்கு பெரிதான பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது தமிழில் பிரபுதேவாவுடன் `குலேபகாவலி' மலையாளத்தில் மோகன்லாலுடன் `வில்லன்' தெலுங்கில் கோபிசந்துடன் `கௌதம் நந்தா' உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. டிவிட்டரில் தொடர்ச்சியாக ரசிகர்களுடன் உரையாடி வரும் ஹன்சிகாவை, பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தற்போது 30 லட்சத்தைத் தொட்டுள்ளது. இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் ஹன்ஷிகா.

மேலும் ஸ்ரேயா, திவ்யதர்ஷனி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகைகளில் டிவிட்டரில் அதிகமான தொடர்பாளர்களுடன் ஸ்ருதிஹாசன் 52 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளார். அதையடுத்து சமந்தா 40 லட்சம் தொடர்பாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், த்ரிஷா 36 லட்சம் தொடர்பாளர்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹன்சிகா 30 லட்சம் தொடர்பாளர்களுடன் நான்காவது இடத்திலும் நீடிக்கிறார்கள். இவர்களையடுத்து தமன்னா 16 லட்சம், ரகுல் ப்ரீத் சிங் 10 லட்சம் தொடர்பாளர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தமன்னா நடித்ததற்கு பிறகு திரைத்துறையில் காலடி வைத்துள்ள ஹன்சிகா குறுகிய காலத்திலே அவரைவிட அதிக தொடர்பாளர்களுடன் முன்னிலை பெற்று சாதித்துள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon