மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

அன்பளிப்பாக வழங்கத் தயார் : பன்னீர்

அன்பளிப்பாக வழங்கத் தயார் : பன்னீர்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமானதும், பிரச்னைக்குரியதுமான கிணற்றை கிராம மக்களுக்கே அன்பளிப்பாக வழங்கத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

லட்சுமிபுரத்தில் உள்ள ஓபிஎஸ்-க்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டப்பட்டு, ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பல போராட்டங்கள் கடந்த சில நாட்களாகக் கிராம மக்களால் நடத்தப்பட்டன. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணற்றைக் கிராம மக்கள் ஒன்று கூடி முற்றுகையிட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த வாரம் போலீசார் முன்னிலையில், ஓபிஎஸ் தரப்பில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து தண்ணீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு, நிலைமை சரியானது.

இந்நிலையில், சென்னையில் ஜூலை 17-ஆம் தேதி(இன்று) ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “பிரச்னைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கே அன்பளிப்பாக வழங்கத் தயார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon