மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

தைரியம்!

தைரியம்!

தற்போது அரசியல்வாதி யார்? நடிகர் யார்? என்று தெரியாத அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. அரசியல்வாதிகள் எல்லாம் தங்கள் உடை, நடை, பேச்சு... ஆகியவற்றில் நடிகர்களைப் போல் செயல்படுகின்றனர். அதேபோல் நடிகர்கள் எல்லாம் தங்கள் படத்தில் வரும் வசனங்களைப் போல் அரசியலிலும் பேசி வருகின்றனர். அந்தவகையில், தொடர்ச்சியாக தனது பேச்சில் எப்போதும் எதாவது ஒரு அரசியல் விமர்சனத்தை முன்வைத்துப் பேசிவரும் கமல், தற்போது தொடர்ச்சியாக ஆளும் அரசை விமர்சனம் செய்து வருகிறார். இதற்குப் பதில் கொடுக்கும் வகையிலும் ஆளும் தரப்பினர் அடிக்கடி கமலுக்கு பதில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ‘திமுக ஆட்சியில் நடிகர்களை மிரட்டி முதலமைச்சர் மாநாட்டில் பேச வைத்த போது கமல் எங்குச் சென்றிருந்தார்? நடிகர் அஜித் மட்டுமே அப்போது தைரியமாக குரல் கொடுத்ததாகவும், இந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன்’ என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கிரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜனநாயக நாட்டில் குற்றச்சாட்டு சொன்னால் அதற்கு பதில் சொல்லக்கூடாது என்று உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு முறையாகப் பதில் சொல்லுவோம் என்றும் தெரிவித்த அமைச்சர், கமலஹாசன் தனது முதுகில் ஆயிரத்து எட்டு அழுக்கை வைத்துக் கொண்டு தங்களைப் பற்றி பேச அருகதை இல்லை’ என்று கூறியுள்ளார். இவர்களுக்கு ஏதுவாக திமுக தரப்பில் இருந்து கமலுக்கு ஆதரவு தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon