மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

நிவேதா பெத்துராஜ்: ரசிகர்கள் ஏமாற்றம்!

நிவேதா பெத்துராஜ்: ரசிகர்கள் ஏமாற்றம்!

மிருதன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள திரைப்படம் டிக் டிக் டிக். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஜூலை17 ) இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியாளர் பற்றிய திரைப்படம் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயம் ரவி விண்வெளி செல்லும் ஆராய்ச்சியாளர்களைப் போல் உடை அணிந்திருந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்புகைப்படம் வெளியானது உறுதியாகியுள்ளது. இன்று வெளியான இப்படத்தின் போஸ்டரில் ஜெயம்ரவி விண்வெளி ஆராய்ச்சியாளர் உடையில் இருக்கிறார். மேலும் இப்படத்தின் நாயகியான நிவேதா பெத்துராஜ் சண்டைக் காட்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. ஆனால் இப்படத்தின் போஸ்டரில் நிவேதா பெத்துராஜ் இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளது. டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon