மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை!

அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை!

மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைச் செல்லாதவையாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியா பணமில்லா பொருளாதாரமாக வளர்ச்சியடையும் என்று கூறியது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் அனைவரும் தங்களிடமிருந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். இவற்றுக்கு மாற்றாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் மூலமாக மக்களுக்கு விநியோகித்தது ரிசர்வ் வங்கி. பணத்தட்டுப்பாடு நிலவியதன் காரணமாக மக்கள் பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மேற்கொண்டனர். மேலும், இப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசு தரப்பிலிருந்தும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ’டிஜிட்டல் லக்கி கிரகக் யோஜனா’ மற்றும் ’டிஜிட்டல் வியாபார் யோஜனா’ ஆகிய இரு திட்டங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் 7 சதவிகிதமும், ஐ.எம்.பி.எஸ். வாயிலாக மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் 200 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon