மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

போதைப் பொருள் விவகாரத்தில் ராணா?

போதைப் பொருள் விவகாரத்தில் ராணா?

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்படத் திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் ராணாவுக்கும் அவரது சகோதரர் அபிராமுக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராணா சமீபத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார். இந்தக் குற்றச்சாட்டால் தற்போது ராணா ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரிடையும் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி அதிர்ச்சியடைந்துள்ள ராணாவின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு பத்திரிக்கை செய்தி ஒன்றில் கூறும்போது, ‘போதைப் பொருள் விவகாரத்தில் என் மகன்களை சம்மந்தப்படுத்துவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேவையில்லாமல் என் மகன்களை இதில் தொடர்படுத்தி அவர்களின் பெயரை கெடுக்க சிலர் நினைக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசில் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை’ என்றார். இருப்பினும் யார் யார் சம்மந்தப்பட்டவர்கள் என்று விசாரணைக்குப் பின்னே தெரியும்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon