மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

கன்னட சூப்பர் ஸ்டாருடன் வெற்றிமாறன்

கன்னட சூப்பர் ஸ்டாருடன் வெற்றிமாறன்

இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்கள் வரிசையில் முக்கியமானவரும் கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். கடந்த பத்து வருடங்களாய் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' மற்றும் 'விசாரணை' ஆகிய மூன்றே படங்களை கொடுத்து தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை தன் படங்களின் மூலம் பெற்றதோடு சிறந்த திரைக்கதை இயக்குநராய் உள்ளார். இந்த மூன்று படங்களை அடுத்து வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடிப்பில் 'வடசென்னை' படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரை வைத்து படமொன்றை இயக்கவுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை திரைப்படம் மொத்தம் மூன்று பாகங்களை கொண்டது. இதன் முதல் பாகத்தை தான் தற்போது வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 'வடசென்னை' படத்தின் மூன்று பாகங்களையும் இயக்கி முடித்த பின்னரா? அல்லது முதல் பாகம் முடிந்தவுடன் புனித் ராஜ்குமார் படத்தை இயக்கவுள்ளாரா? என்பது குறித்தான தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon