மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

இளம் இயக்குநர்களுடன் பி.சி.ஸ்ரீராம்!

இளம் இயக்குநர்களுடன் பி.சி.ஸ்ரீராம்!

இதுவரை 31 படங்கள் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘மீரா’, ‘குருதிபுனல்’, ‘வானம் வசப்படும்’ என மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். தமிழக அரசு, கேரள அரசு, ஆந்திர அரசு விருதுகள் மற்றும் தேசிய விருது என பல விருதுகள் பெற்றிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் ஒளிப்பதிவாளர்களான ஜீவா, கே.வி.ஆனந்த், திரு, ராம்ஜி, எம்.எஸ்.பிரபு, பெளசியா, அர்விந்தகிருஷ்ணா, பாலசுப்பிரமணியெம், நீரவ் ஷா, மகேஷ் முத்துசாமி, வின்சென்ட், செழியன், சஞ்சய், துவாரகாநாத் என அத்தனை பேரும் பி.சி.யின் சீடர்கள்தான்!.

ஆரம்பகாலக் கட்டங்களில் பி.சி. மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான அனைத்துப் படங்களும் மாஸ்டர் பீஸ். தற்போது இளம் இயக்குநர்களுடன் பணியாற்றிவரும் பி.சி. ஸ்ரீராம், அடுத்ததாக பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ள தமிழ் படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘வேலைக்காரன்’ மற்றும் சிவகார்த்திகேயன் - பொன்.ராம் படங்களைத் தொடர்ந்து 24 ஏ.எம். நிறுவனம் தனது அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் நிவின் பாலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் அறிமுகம் ‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிமுக விழாவில் நடைபெற்றது. ஆனால், தற்போது தான் அப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. காலத்துக்கு ஏற்றார்போல் தங்களை அப்டேட் செய்யும் கலைஞர்கள் குறைவாக இருக்கும் இந்தச் சூழலில் பி.சி.ஸ்ரீராம் அடுத்த தலைமுறையுடன் பணியாற்ற தன்னை அப்டேட் செய்து பணியாற்றுவது சிறப்பு.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon