மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

நான் பொதுமக்கள் வேட்பாளர்!

 நான் பொதுமக்கள் வேட்பாளர்!

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னிடம் பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதாக, எதிர்க்கட்சிகள் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி, ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தியாளரிடம் நேற்று முன்தினம் ஜூலை 15ஆம் தேதி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, “துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தன்னை ஓர் அரசியல் வேட்பாளர்” என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திரமான வேட்பாளருக்கு, எந்த ஒரு மிரட்டலுக்குப் பயந்தோ அல்லது ஆதரவாகவோ இல்லாமல் சுயமாக சிந்தித்து வாக்களிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், தனக்கு ஆதரவு தெரிவிக்கும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குக் கடிதம் எழுதியதாகவும் கூறினார்.

மேலும், ‘தி ஹிந்து’ நிருபரின் கேள்விக்கு கோபாலகிருஷ்ண காந்தி கூறிய பதில் விவரம் வருமாறு:

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் ஒருபக்கமும், காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எதிர்பக்கமும் களத்தில் உள்ளன. இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ஜனாதிபதி தேர்தல் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் இரண்டும் பல தலைமுறைகள் கடந்து ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில், அவர்கள் இரட்டை வாக்களிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது நல்லதுதான். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவரும் நாடாளுமன்றத்திற்கு ஆதாரமான அரசியலமைப்பு அலுவலகங்கள் கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிதான் ஜனாதிபதி என்பது பெரும்பாலும் பலருக்கு நினைவில் வருவதில்லை. உண்மையில் அவர் நாடாளுமன்றத்தின் தலைவராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதிதான் தொடங்கி வைக்கிறார். துணை ஜனாதிபதி மாநிலங்களவையின் தலைவராக இருக்கிறார்.

அரசியல் கேள்வி ?

இந்தத் தேர்தல்களின் கருத்து குறித்து நீங்கள் கேட்கையில், ஜனாதிபதி வி.வி.கிரி தேர்தல் நடைபெற்றபோது வி.வி.கிரி. சுயமாகக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல், உண்மையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் எந்த ஒரு எம்.பி-யும் அவர்களது அரசியல் கட்சி கொறடா உத்தரவுப்படிதான் செயல்பட வேண்டும். ஆனால், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில், கொறடா உத்தரவிடுவது இல்லை என்பது தெளிவு. ஒவ்வொரு எம்.பி-யும் தங்கள் கட்சி சார்பை பொறுத்து, சுதந்திரமாக சுயமுடிவெடுத்து வாக்களிப்பார்.

அதேபோல், துணை ஜனாதிபதி பதவிக்கு எம்.பி-க்களும், ஜனாதிபதி பதவிக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் எந்திர ரீதியாக வாக்களிக்காமல் தங்கள் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

இதற்கான பெருமை ஜனாதிபதி வி.வி. கிரியையே சாரும். அவர்தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, பிரதமர் இந்திரா காந்தி மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் மனசாட்சியின்படி வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அது ஒரு கருத்தியல் காரியமாகி விட்டது என்பது முற்றிலும் சரியானது. ஆனால், சட்டசபை உறுப்பினர்களின் இறையாண்மை உரிமைகள் பாதிக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன்.

துணை ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தேர்தலின் நீட்டிப்பா?

துணைத் தலைவர் என்ற தமிழ் சொல்லில் துணை என்பதற்கு ஆதரவு என்று அர்த்தமாகும். அவர் உண்மையில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஓர் ஆதரவாக இருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படும் துணைத் தலைவர், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு எதிராக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் உங்களை எவ்வாறு காண்கிறீர்கள்?

இது ஒரு முக்கியமான கேள்வியாகும். மேலும் என்னுடைய சிந்தனையைத் தெளிவுபடுத்த எனக்கு உதவுகிறது. நான் பொதுமக்களின் வேட்பாளராகவே என்னைக் கருதுகிறேன். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் என்னிடம் கேட்டுக் கொண்டன. நான் அரசியல் கட்சி சாராத தனிப்பட்ட நபர். எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆளும்கட்சிக்கெதிராக பெரும் வேறுபாடுகளுடன் போட்டியிடுவதால் நான் ஓர் அரசியல்வாதி என்று கூறலாம். அரசியலமைப்பின் கருத்துகளைச் சுதந்திரமாக மாநிலங்களவையில் பேசுவதை அவர்கள் விரும்புகின்றனர். இதை, நான் இந்தியாவின் ஜனநாயகத்துக்கான அடையாளம் என்று கருதுகிறேன். அதன் காரணமாக, நான் எதிர்க்கட்சி வேட்பாளராக அழைக்கப்படுவதை மிகைப்படுத்தல் என்று நினைக்கிறேன். எம்.பி-க்கள் அவர்களது கட்சியுடன் இணைந்திருந்தாலும், அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, தெளிவான அரசியல் போட்டியில் நீங்கள் நிச்சயமாக இழுக்கப்பட்டு, பி.ஜே.பி-க்கு எதிரான வேட்பாளராகக் கருதப்படுவீர்கள் ...

பிரச்னைகள் குறித்து நாம் தொலைநோக்கு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய நேரமிது. புகழ்ச்சியின் மயக்கத்தில் நாம் அனைவரும் இருக்கும்போது, பிரச்னைகள் குறித்து அலசும்போது இது அரசியல் கட்சிக்குரிய விஷயமல்ல. சுயநலத்துக்கும், சுய விமர்சனத்துக்கும் உள்ள திறனை அனைத்துக் கட்சிகளும் இழந்து விட்டதாகவே தோன்றுகிறது.

அதனால்தான், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் ஆகியோர் அரசியலைச் சார்ந்தவர்கள் இல்லை என்று நான் கூறுகிறேன். அவர்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். தவறான பாதையில் நாடு செல்லும்போது, அவர்கள் பாதுகாக்கிறார்கள். அதுபோலவே நம்மை நாம் திருத்துகிறோம். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக மட்டுமே செயல்படும்போது, சுய மரியாதையைத் தவிர அவர்கள் வேறு எதையும் இழப்பதில்லை” என்று கூறினார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon