மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

விம்பிள்டன்: உலக சாதனை படைத்த ஃபெடரர்

விம்பிள்டன்: உலக சாதனை படைத்த ஃபெடரர்

இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று (ஜூலை 16) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார்.

இப்போட்டியில் உலகின் 3ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் 7ஆம் நிலை வீரரான குரோஷியாவின் சிலிச்சும் மோதினர். இது ஃபெடரர் பங்குபெறும் 11ஆவது விம்பிள்டன் இறுதிப்போட்டியாகும். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய ஃபெடரர் தொடர்ச்சியாக இரண்டு செட்களையும் 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இது ஃபெடரர் வெல்லும் எட்டாவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் விம்பிள்டனை எட்டு முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஃபெடரர்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon