மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

இன்றைய ஸ்பெஷல்: ஆலூ பனீர் சப்ஜி

இன்றைய ஸ்பெஷல்: ஆலூ பனீர் சப்ஜி

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு - 3

பனீர் - 200 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 3

இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி

சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

ஏலக்காய் - 3

சீரகம் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிது

கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

என்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் தாளித்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி விட்டு பனீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். வெந்ததும் கரம் மசாலாத்தூள், மல்லித்தழை சேர்த்து இறக்கவும். சுவையான ஆலூ பனீர் சப்ஜி தயார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon