மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

கணவர் காத்திருப்பு அறை!

கணவர் காத்திருப்பு அறை!

சீனாவைச் சேர்ந்த மால் ஒன்று ஷாப்பிங் செய்யும் பெண்கள் தங்களின் கணவர்களை விட்டுச்செல்வதற்கான காத்திருப்பு அறை ஒன்றை அமைத்துள்ளது.

ஷாப்பிங் என்பது பெண்களுக்கு எப்போதும் விருப்பமான ஒன்றாகவே உள்ளது. ஷாப்பிங் என்றதும் நேரம் போவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. ஆனால், அவர்களுடன் செல்லும் கணவர்களின் நிலைதான் திண்டாட்டம். இவர்களுக்காகவே பிரத்யோக அறையை சீனாவைச் சேர்ந்த மால் ஒன்று உருவாக்கியுள்ளது. சீனாவின் ஷாங்காயின் உள்ள குளோபல் ஹார்பர் என்ற மால் ஷாப்பிங் செய்யும் மனைவிகள் தங்களின் கணவர்களை விட்டுச் செல்வதற்காகவே கண்ணாடியிலான கேபின்களை அமைத்துள்ளது.

இந்த கேபினுள் சேர், கணினி மற்றும் வீடியோ கேம் போன்றவை இருக்கும். விருப்பமான ஆண்கள் அதனுள் அமர்ந்து தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். தற்சமயம் இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகின்றன. எனினும் எதிர்காலத்தில் இதற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டமும் உள்ளதாம். இதற்கிடையே இந்தத் திட்டம் சிறந்து ஒன்று என்று அச்சேவையைப் பயன்படுத்திய கணவர்மார்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon