மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாகும் அனு!

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாகும் அனு!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனு இம்மானுவேல். இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜ்ஜு’ படத்தில் நடித்துள்ளார். அதன்பின் தெலுங்குத் திரையுலகில் மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது துப்பறிவாளனுக்குப் பிறகு தெலுங்கில் முக்கியமான படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பை நேற்று (ஜூலை 16) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “எனது அடுத்த தெலுங்குத் திரைப்படம் பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் சாரோடு இணைந்து நடிக்கிறேன். வம்சி விக்கந்தம் இயக்கும் இந்தப் படத்தை விஷால் - சேகர் இசையமைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். ராம லட்சுமி சினி கிரியேஷன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

அல்லு அர்ஜூனோடு ஜோடி சேர்ந்து நடிப்பதன்மூலம் இரண்டு மூன்று படங்களிலேயே அனு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரவுள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon