மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

10 ஆண்டுகளில் 50 திரைப்படங்கள் : காஜல்

10 ஆண்டுகளில் 50 திரைப்படங்கள் : காஜல்

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் 19 ஜூன் 1985ல் பிறந்தார் . இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் ஆரம்பக்காலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை. பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெறத் தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிபுரிந்தது.

அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை. தமிழில் தொடர்ந்து “மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம்” ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக ஒரு படத்திலும், அஜித் ஜோடியாக ‘விவேகம்’ படத்திலும் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.

2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன. இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு காஜல் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

இது வரை காஜல் அகர்வால் 10 வருடங்களில் 50 படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித் படம் வெளிவந்த பிறகு தமிழிலும் அவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இன்று (19-0602017) பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon