மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

`விக்ரம் வேதா’ இசை ஆல்பம்!

`விக்ரம் வேதா’ இசை ஆல்பம்!

புஷ்கர் - காயத்ரி இணை இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம் வேதா'. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சூரியன் எப்.எம் `பிளேடு நம்பர்.1’ நிகழ்ச்சியில் இன்று (ஜூன்19) நடைபெற்றது.

இந்த இசை ஆல்பத்தில் ஏற்கனவே மோகன்ராஜ் எழுதிய `யாஞ்சி யாஞ்சி’ பாடலும், முத்தமிழ் எழுதிய `டசக்கு டசக்கு’ பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடல்களோடு விக்னேஷ் சிவன் எழுதிய `கருப்பு வெள்ளை’ பாடலும், இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் எழுதிய `போகாத என்னை விட்டு’ பாடலும் இந்த ஆல்பத்தில் இணைந்துள்ளன.

இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இப்படத்தை வரும் ஜூலையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

வீடியோ

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon