மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

கேரளாவின் 'காஸா' தெருவை கண்காணிக்கும் உளவுத்துறை!

கேரளாவின் 'காஸா' தெருவை கண்காணிக்கும் உளவுத்துறை!

பாலஸ்தீன நகரின் கஸா என்ற பெயரை கேரளாவின் காசர்கோடு நகராட்சியில், உள்ள ஒரு தெருவுக்கு கஸா என்று பெயர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'காஸா' ஊடகங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நகரம். இஸ்ரேல் - எகிப்து நாடுகளுக்கு இடையே பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம்தான் காஸா. அதனால், இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே நடக்கும் சண்டைகளின்போது காஸா நகரம் ஊடகங்களில் இடம்பெறுவது வழக்கம்.

இந்நிலையில், கேரளா மாநிலத்தின் காசர்கோடு நகராட்சியில் உள்ள துருத்தி வார்டில் உள்ள ஜூமா மஸ்ஜித் தெரு அண்மையில் பெயர் மாற்றப்பட்டு 'காஸா தெரு' என்று எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு முகமையும் கேரளாவின் காசர்கோடு நகராட்சியின் ஜூமா மஸ்ஜித் தெரு பெயர் காஸா என்று பெயர் மாற்றத்தில் ஐ.எஸ். தீவிரவாதப் பின்னணி உள்ளதாக சந்தேகிக்கிறது. இந்த சந்தேகத்துக்கு காரணம் கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவின் தற்போதைய காஸா தெரு பகுதியிலிருந்துதான் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள். காணாமல் போன இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம், காசர்கோடு பஞ்சாயத்து தலைவர் ஏ.ஜி.சி.பஷீர் துருத்தி ஜூமா மஸ்ஜித் தெருவை காஸா என்று பெயர் மாற்றி திறந்துவைத்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் ஜூன் 19ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளிடம் கூறுகையில், காசர்கோடு நகராட்சி எல்லையில் வரும் அந்த தெருவை திறந்துவைத்தது நான் இல்லை. ஆனால், நான் அண்மையில்தான் அந்த பகுதிக்கு போயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

காஸா என்று பெயர் மாற்றப்பட்ட அந்த தெருவுக்கு நகராட்சி நிதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது போன்ற பெயரில் ஏதேனும் தெரு நகராட்சி எல்லைக்குள் இருந்தால் எங்களின் கவனத்துக்கு வந்திருக்கும் என்று காசர்கோடு நகராட்சி தலைவி பீபாத்திமா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்பகுதியில் உள்ள பாஜக தலைவர் ரமேஷ் கூறுகையில், காசர்கோடு நகராட்சி பகுதியிலுள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற தீவிரமான முயற்சி நடக்கிறது. இந்த விஷயம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இது போன்ற பல பெயர்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறுகையில் மத வகுப்பு பிரிவுடைய காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்பினர் ஊடுருவியிருக்கின்றனர். இருப்பினும், மத்திய உளவுத்துறையின் பார்வையில் நீங்கள் குறிப்பிடுகிற காஸா தெரு பெயர் மாற்றம் சம்பவம் எங்களின் கவனத்துக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon