மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

பொறியியல் மாணவர் சேர்க்கை : ரேண்டம் எண்!

பொறியியல் மாணவர் சேர்க்கை : ரேண்டம் எண்!

பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்- 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியானது.

அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. உயர் கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்கிறது.

அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிட்டனர்.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டுப் பொறியியல் இடங்களுக்கு 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை தயார் செய்வதற்கு வசதியாக ரேண்டம் எண் ஜூன் 20ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல், ஜூன் 27ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும்’ என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரேண்டம் எண் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரவரிசைப் பட்டியல் வரும் 22ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும், கலந்தாய்வு வரும் ஜுன் 24ஆம் தேதி முதல் ஜுலை 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon