மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

ரீஎன்ட்ரி தரும் உதவி இயக்குநர்!

ரீஎன்ட்ரி தரும் உதவி இயக்குநர்!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராய் இருந்து நடிகராய் ஜொலித்தவர்கள் அநேகம் பேர். அப்படி இயக்குநர் சேரனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து ‘குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். அதன் பிறகு ராசு மதுரவன் இயக்கிய ‘கோரிப்பாளையம்’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்துடன், ‘மெய்யாலுமே பொய்’ படத்திலும் நடித்தார். நடித்தப் படங்கள் பெரிதாய் ஹிட் ஆகாததால், ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தை இயக்கி நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ‘எந்த நேரத்திலும்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆர்.முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை என்.ராமலிங்கம் தயாரித்துள்ளார். மேலும் சபேஷ் முரளி பின்னணி இசையும், பி.சதீஷ் பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமகிருஷ்ணனுடன் லீமா பாபு, யஷ்மித், சாண்ட்ரா எமி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கியிருக்கும் ராமகிருஷ்ணனுக்கு இப்படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon