மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 ஜுன் 2017

புகார் கூற முடியவில்லை: ஸ்ரேயா வருத்தம்!

புகார் கூற முடியவில்லை: ஸ்ரேயா வருத்தம்!

பிரகாஷ் ராஜ் தயாரித்து, இயக்கி நடித்த ‘உன் சமையல் அறையில்’ படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நானா படேகர் நடிக்கிறார். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் பற்றி புகார் தெரிவிக்க முடியவில்லை என்று ஸ்ரேயா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இந்தி ரீமேக்குக்கு ‘தட்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சினேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கும் இப்படத்தில் அலி பாசல், டாப்ஸி உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா, அவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து ஸ்ரேயா கூறும்போது, “நானும் பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடித்தபோது இயக்குநரைப் பற்றி குறைக்கூறி எங்களுக்குள் பேசிக் கொள்வோம். ஆனால், தற்போது பிரகாஷ் ராஜ் இயக்குநராக இருப்பதால் என்னால் அவரைப் பற்றி புகார் கூற முடியவில்லை” என்றார். சிம்புவின் ‘AAA' படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ரேயா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடிக்கிறார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon