மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 18 ஜுன் 2017

வித்தியாசமான தோற்றத்தில் ஈஷா குப்தா

வித்தியாசமான தோற்றத்தில் ஈஷா குப்தா

அஜய் தேவன், இம்ரான் ஹசிமி, இலியானா, ஈஷா குப்தா ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள Baadshaho என்ற பாலிவுட் திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. மிலன் லுதிரா இயக்கியுள்ள இந்த திரைப்படம் 1975ஆம் ஆண்டு இந்தியாவை பிரதிபலிக்கும் கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே ஒரு போஸ்டர் மட்டும் வெளிவராமல் அனைத்து முக்கிய கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே போஸ்டர்களை வெளியிட்டு வந்தது படக்குழு. அதன்படி மொத்தமாக 6 போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு இன்னும் இரு தினங்களில் டீசர் வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். அஜய் தவான், இம்ரான் மற்றும் இலியானாவின் போஸ்டர்கள் கடந்த 15ஆம் தேதியே வெளியிடப்பட்ட நிலையில் இன்று அதில் நடித்துள்ள ஈஷா குப்தாவின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதில் இதுவரை இருந்த தோற்றத்தில் இருந்து சற்றே வித்தியாசமான தோற்றத்தில் ஈஷா குப்தா காட்சியளிக்கிறார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon