மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 18 ஜுன் 2017

ரஜினி பெயரில் நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்

ரஜினி பெயரில் நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது முதற்கட்டப் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

இம்மாத இறுதியில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் மும்பைக்குப் பயணமாகவுள்ளார் ரஜினி. ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரில் மராத்தி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அரவிந்த் ஆகாஷ். இவருக்கான காட்சிகளைத் தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. ரஜினியின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட். அவருடைய நிஜப்பெயரில் நடித்துவருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அரவிந்த் ஆகாஷ். ‘காலா’ படத்தில் ரஜினி தவிர்த்து உள்ள காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon