மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 18 ஜுன் 2017

ஷிவானிக்கு வாய்ப்பு இல்லை?

ஷிவானிக்கு வாய்ப்பு இல்லை?

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் அறிமுகமான ‘கும்கி’ திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் தற்போது பிஸியாக நடித்து வருவதாலும், பிரபு சாலமன் எப்போதும் புதிய முகங்களை வைத்தே தனது படைப்பை உருவாக்குபவர் என்பதாலும் தற்போது ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கத் தேர்வாகியுள்ளார் என்று கடந்த இரண்டு நாள்களாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலையும் வெளியிடாத இயக்குநர் பிரபு சாலமன், கும்கி-2 படத்துக்கான கதாநாயகன், கதாநாயகியைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்ற தகவலை தனது மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிட்டுள்ளார்.

இதை வைத்துப்பார்க்கும்போது ‘கும்கி 2’-வுக்காக ஷிவானி தேர்வாகவில்லை என்பது தெரியவருகிறது. ‘கும்கி 2’ படத்துக்கான லொகேஷன் எல்லாம் தேர்வுசெய்து வைத்துவிட்டு காத்திருக்கிறார் பிரபு சாலமன்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon