மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

பிரிட்டிஷ் அக்ரோவின் காளான் புரட்சி!

 பிரிட்டிஷ் அக்ரோவின் காளான் புரட்சி!

காளான்…

சொன்னவுடனே மனக் கண்ணில் என்ன முளைக்கும்? மழைக் காலத்தில் செடிகளுக்கு இடையே, கற்களுக்கு இடையே குடை போல முளைத்துக் கிடப்பவைதானே?

ஆனால்… 2000 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் உணவாகப் பயன்பட்டு வந்த இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்பதைப் போல… நமது உணவுப் பழக்கத்தில் இருந்து அறவே அகன்றுவிட்டது. மீண்டும் கடந்த சில பத்தாண்டுகளாகவே காளான் என்ற உணவுப் பொருள் பற்றிய விழிப்புணர்வு மெல்ல மெல்ல மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.

காளான் என்றால் என்ன?

குழப்பிக் கொள்ள எதுவுமே இல்லை. ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு முக்கியமாக பயன்படுவது தாவரங்களுக்கென இருக்கும் பச்சையம் என்ற நிறமி.காளானும் தாவரம்தான். ஆனால் பச்சையம் இல்லாத தாவரம்.பச்சையம் என்ற நிறமி இல்லாததால், காளானால் ஒளிச்சேர்க்கை செய்து தானாகவே தனக்கான உணவை தயாரிக்க முடியவில்லை.அதனால், சில உயிரினங்கள் மீது ஒட்டி வாழ்கிறது.

மழைக் காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவரம்தான் காளான். காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் நிறங்களிலும் வளரக்கூடியதாகும். காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன்மேல் ஒரு தலைப்பகுதியும் காணப்படும். பொதுவாக, தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும். தலைப்பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும். இவற்றிக்கிடையில் லட்சக்கணக்கான காளான் பூசண நுண் வித்துகள் நிறைந்திருக்கும் . இயற்கையில் இவ்வித்துக்கள் மக்கிய பண்ணைக் கழிவுகள் மற்றும் பொருட்களில் வளர்ந்து பூசண இழைகளாகப் படர்ந்திருக்கும். சாதகமான சூழல் நிலவும் போது அதாவது, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்குப்பின், பூசண இழைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காளானாக வளரும்.

இயற்கை காளானிடம் இருந்து பச்சையைப் பறித்தாலும்… அதற்கு பதில் பலமான சத்துகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

பச்சையமல்லாத தாவரங்களான காளான்களை இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் உணவுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் உண்மையிலேயே இப்போது ஓர் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.

காளான் புரட்சியை நிறுவனமயமாக நடத்துவதில் இந்தியாவில் சிற்சில நிறுவனங்களே பட்டியலில் இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, ‘பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ் (இந்தியா)’ நிறுவனமும் முக்கிய இடத்தில் இருக்கின்றது என்பது தமிழர்கள் எல்லாம் பெருமைப்படத் தக்க விஷயம்தானே.

கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் வெள்ளை பட்டன் காளான், காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் பாரத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து காளான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை செயல்படுத்தி வருகிறது.

காளான் வளர்ப்புக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அதை நாம் தெரிந்துகொண்டால்தான்… ‘பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் முக்கியத்துவத்தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

‘’8 ஆம் நூற்றாண்டின் ஃபிளாமுலினா வெலிடிபெஸ் என்ற வகைக் காளான்களை முதன்முதலாக சீனர்கள் வளர்க்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஜப்பானில் 300 வருடங்களுக்கு மேலாக காளான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது 1928 ஆம் ஆண்டில் ஜப்பானில் மொரிக்கி என்பவர் மரத்தூள் மற்றும் தவிடு ஆகியவற்றைக் கொண்டு காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் மரக்கட்டைகளிலும் பின்னர், பாட்டில்களிலும் என நடந்த காளான் வளர்ப்பு 1960களில் ஜப்பானில் பல்வேறு பரிமாணங்களை சந்தித்தது. அதிலிருந்து 1980 வரையில் காளான் வளர்ப்பில் உலகில் முன்னணி நாடாக ஜப்பான் திகழ்ந்தது. அதன் பின்னர் சீனா காளான் வளர்ப்பில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் மட்டும் சீனா ஒட்டுமொத்தமாக சுமார்2,00,000 டன் அளவிலான காளான்களை உற்பத்தி செய்தது. சீனாவை போலவே உலகின் பல்வேறு நாடுகள் வெளியிட்ட புள்ளி விவரங்களில் இருந்து காளான் வளர்ப்பு எவ்வாறு தீவிரமடைந்தது என்பதைக் காணமுடிகிறது.

இதெல்லாம் சரி… இந்தியாவில் நம் தமிழகத்தில் காளான் வளர்ப்பின் நிலை என்ன?

தமிழகத்தில் காளான் வளர்ப்பு பெருமளவு பேசப்படாவிட்டாலும் அதற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் தினசரி 75 முதல் 100 டன் அளவிலான காளான் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் காளானின் அளவு 10 முதல் 15 டன் மட்டுமே. எனவே, தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற பகுதிகளிலிருந்து காளான் பெறப்படுகிறது. காளான் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காளான் ஆராய்ச்சி இயக்குநரகம் உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றன.

இந்த விழிப்புணர்வை செயல்வடிவத்தில் நடத்திக் காட்டிவரும் நிறுவனங்களில் தலை சிறந்த்துதான் பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ்(இந்தியா) நிறுவனம். காளான்களின் முக்கியத்துவம் மற்றும் காளான் உண்பதன் பயன் குறித்து பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் திருஅகிலன் ராமநாதனிடம் கேட்போம்.

காத்திருங்கள்…

காளான் - சில்லரை மற்றும் மொத்த விற்பனை:-

பட்டன் காளான்கள் பிரிட்டிஷ் அக்ரோ நிறுவனப் பண்ணைகளில் கிலோ ரூ. 150 என்ற அளவில் கிடைக்கிறது.

முகவரி:

பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
(அக்ஷயா பொறியியல் கல்லூரி அருகில்)
புழுதிவாக்கம் (அஞ்சல்)
மதுராந்தகம் தாலுக்கா
காஞ்சிபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு - 603 314.
தொலைபேசி : 8939991194

கடைஎண்: டி-29,
பெரியார் காய்கறிச் சந்தை
கோயம்பேடு
சென்னை
தமிழ்நாடு - 600 092
தொலைபேசி : 8939994236

எண்: 208,
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை
மாட்டுத்தாவணி
மதுரை - 625007
தொலைபேசி: 8939821172

எண்: 205
சின்னசுவாமி நாயுடு சாலை
நியூ சித்தாபுத்தூர்
கோயம்புத்தூர்
தொலைபேசி : 8939994235

விளம்பர பகுதி

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon