மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தினகரனால் உயிருக்கு ஆபத்து : மதுசூதனன் புகார்!

தினகரனால் உயிருக்கு ஆபத்து : மதுசூதனன் புகார்!

தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் இன்று (21.4.2017) போலீஸ் காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் புகார் மனுவை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- தினகரன் மற்றும் அவர் களது குடும்ப அரசியலை எதிர்த்து ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் எதிர்தரப்பு வேட்பாளரான தினகரனின் தூண்டுதலின் பேரில் வெளிமாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்கள் நான் வசித்து வரும் வீட்டை கொடிய ஆயுதங்களுடன் நோட்டமிட்டனர்.இதனை எங்கள் அணியின் மாற்று வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தடுத்து கேட்டார். எனக்கும், ராஜேசுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தொண்டர்கள் திரண்டதின் காரணமாக குண்டர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.மேற்படி நிகழ்வு குறித்து உடனடியாக கடந்த மாதம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தற்போது அஇஅதிமுக (அம்மா) அணியிலிருந்து தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் நீக்கப்பட்ட பின்னர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தினகரனின் தூண்டுதலின் பேரில் அவரின் ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தலைமையில் என்னையும், ஆர்.எஸ். ராஜேசையும் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மீண்டும் என்னையும், ராஜேசையும் நோட்டமிட்டு வருகின்றனர். இது எங்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேற்படி குண்டர்களையும், அவர்களை ஏவிய டி.டி. வி.தினகரன், வெற்றிவேல் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக எங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon