மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

விசா கட்டுப்பாடு : இந்தியா கண்டனம்!

விசா கட்டுப்பாடு : இந்தியா கண்டனம்!

அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா கட்டுப்பாடுகளுக்கு இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இந்திய நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவில் இல்லை; பற்பல அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளன. அவை இங்கு சம்பாதிக்கும் லாபங்களின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் உயருகிறது. தற்போது அமெரிக்கா கையாளும் இந்த உள்நாட்டு நிர்வாக நடவடிக்கைகளால் இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் சிக்கல் இல்லை. இனி வரும் வருடங்களில், பல அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் தொடங்கத் திட்டமிட்டுள்ளன. எனவே, இவற்றை மனதில் வைத்து இந்தக் காரணிகளை உள்ளடக்கி விவாதம் நடத்தப்பட வேண்டும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் போரை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினார்.

எனினும் நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தில் ஒரு மோதலான நிலைப்பாட்டை உருவாக்க விரும்பவில்லை என்றும் இந்தியா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon