மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் : திண்டுக்கல் சீனிவாசன்

எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் : திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக இரு அணிகளும் இணைந்தால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராகத் தொடர்வார் என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வறட்சி மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை(இன்று) நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் வெளியாகிவருவதால், தமிழகத்தில் அனைவரும் குழப்பமான நிலையில் காணப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

அதிமுக-வின் இரு அணிகளும் இணைந்தால் யாரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வீர்கள் என செய்தியாளர்கள் கேள்விக்கு, அதிமுக இணைந்தால் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராகத் தொடர்வார். நான் தற்போது அவர் தலைமையிலான அமைச்சரவையில்தான் வனத்துறை அமைச்சராக உள்ளேன் என்று அவர் பதிலளித்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon