மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

யார் இந்த நடிகர் - ஏன் இந்தத் தோற்றம்?

யார் இந்த நடிகர் - ஏன் இந்தத் தோற்றம்?

சுஷாந்த் சிங் மற்றும் கிரிட்டி சனன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ராப்டா திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை காக்டெய்ல் திரைப்படத்தை இயக்கிய தினேஷ் விஜன் இயக்கியுள்ளார். டிரைலரைக் கண்டதும் இரண்டு ஜென்மங்களாக நடைபெறும் காதல் கதை என்பதை புரிந்துகொண்டனர் ரசிகர்கள். ஆனால் பெரும்பாலான முந்தைய ஜென்மத்துக்கான காட்சிகள் மாவீரன் திரைப்படம் போன்றும், நிகழ்கால காட்சிகள் இயக்குநரின் முந்தைய திரைப்படமான காக்டெய்ல் திரைப்படம் போன்றும் இருப்பதாக பெரும்பான்மையான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் இருந்தனர். இந்த திரைப்படம் பற்றி சமீபத்தில் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வந்தவண்ணம் இருந்தாலும், அவ்வப்போது சில செய்திகளை படக் குழுவினரே வெளியிட்டவண்ணம் இருக்கின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் தீபிகா படுகோனின் சிறப்பு பாடல் காட்சியையும் படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று ராஜ்குமார் ராவ் 300 வருடங்கள் பழமையான மனிதனாகத் தோன்றும் அவரின் புகைப்படத்தை அவரின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம், காக்டெய்ல் திரைப்படம்போல் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon