மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சர்ச்சைக்குள்ளான மண்டேலா ஓவியம்!

சர்ச்சைக்குள்ளான மண்டேலா ஓவியம்!

கலகக்கார ஓவியரான அயண்டா மபுலு வரைந்துள்ள நெல்சன் மண்டேலா ஓவியம் தென் ஆப்பிரிக்காவில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மரியாதைக்குறைவான ஒழுங்கற்ற விதத்தில் அந்த ஓவியம் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஓவியர் அயண்டா மபுலு இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது, ‘நெல்சன் மண்டேலா தென்ஆப்பிரிக்க மக்களின் நம்பிக்கையாளராகத் திகழ்ந்தார். அவர் பணி செய்த மக்களைவிட தான் புனிதமானவரோ, பெரியவரோ இல்லை என மண்டேலாவுக்கே தெரியும். ஒருவேளை, இப்போது மண்டேலா உயிரோடு இருந்திருந்தால் எனது ஓவியத்தின் பின்னால் உள்ள கருத்துகளை அவர் புரிந்துகொண்டிருப்பார்’ என்று கூறினார்.

நெல்சன் மண்டேலாவின் அறக்கட்டளையைச் சார்ந்தவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அறக்கட்டளை சார்பாக ‘இது அதிர்ச்சிகரமானது. ஓவியர் மபுலுவின் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளித்தாலும் இந்த ஓவியம் எங்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி : EYEWITNESS NEWS

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon