மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

பெரு நிறுவனக் கடன் : தத்தளிக்கும் இந்தியா!

பெரு நிறுவனக் கடன் : தத்தளிக்கும் இந்தியா!

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ‘உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மை’ குறித்த அறிக்கையில், உலக நாடுகளிலேயே இந்தியா அதிகமாக பெரு நிறுவனக் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலக நாடுகளில் தற்போது நிதி ஸ்திரத்தன்மை உயர்வடைந்து வருகிறது. ஆனால் வளர்ந்துவரும் நாடுகள் சில பெரு நிறுவனக் கடன் பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, இந்தியாவில் அப்பிரச்னை நீடிக்கும். இந்தியாவானது தனது நாணயத்தில் ஐந்தில் ஒரு பகுதியை பெரு நிறுவனங்களுக்குக் கடனாக வாரி வழங்கி வருகிறது. சர்வதேச நாடுகளில் அதிகரித்துவரும் பாதுகாப்புவாதக் கொள்கைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும். உதாரணத்துக்கு, அமெரிக்க முதல்வர் சமீபத்தில் கையெழுத்திட்ட ஒரு அறிக்கையால், அங்குள்ள நிறுவனங்கள் பிற நாட்டிலிருந்து (இந்தியா) ஸ்டீல் இறக்குமதி செய்வது கடினமாகும். இந்தியாவின் கடன் சுமை 6.7 சதவிகிதம் என்றளவில் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

இந்திய வங்கிகளைப் பொருத்தவரையில், ஏற்கனவே ரூ.7 லட்சம் கோடி அளவிலான கடன் சுமையில் தவித்து வருகின்றன. ரஷ்யாவைத் தொடர்ந்து, நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் 79 சதவிகித அளவிலான வங்கிகள் தங்களது வருவாயைவிட கூடுதலாக கடனை வாரி இறைக்கின்றன. எனவே, இந்திய வங்கிகளில் மூன்றில் ஒரு பகுதி வங்கிகள் கடன்களை வாரி இறைப்பதிலிருந்து இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு விலகியிருந்தால்தான் கடன்சுமை தீரும்’ என்று தெரிவித்துள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon