மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

அஜித்துக்கு ‘தல’ என்ற பெயர் ‘திருட்டுப் பட்டமா’?!

இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பிரவீன் காந்த். இவரிடம் ரட்சகன் திரைப்படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதுகள் குறித்து கருத்துச் சொன்ன முருகதாஸ், விருதுக் கமிட்டியின் தலைவராக இருந்த இயக்குநர் பிரியதர்ஷனை கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது சிஷ்யரும் முருகதாஸின் குருநாதருமான பிரவீன் காந்த் ஆத்திரமடைந்து, முருகதாஸ் பற்றிய சில தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

என்னிடம் உதவியாளராக ‘ரட்சகன்’ திரைப்படத்தில் வந்து சேர்ந்த நீங்கள், என் மற்ற உதவியாளரான எஸ்.ஜே.சூர்யா மூலம் நடிகர் அஜித்துக்கு கதை சொன்னீர்கள். நான் இயக்கவேண்டிய படத்தை சில சூழ்ச்சியால் என்னிடமிருந்து கைப்பற்றி நீங்கள் எடுத்தீர்கள். என் உதவியாளர்தானே இயக்குகிறார் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். அந்தப் பெருந்தன்மை என் குருநாதர் எனக்கு கற்றுக்கொடுத்த விஷயம்.

தினா என்ற அந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ‘தல’ என்று பட்டம் கொடுத்தீர்கள். அதுவும் என் உதவியாளர் மோகன் சொன்ன விஷயம். ஆனால் இன்று வரை அந்தப் புகழ் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நீங்கள் எடுத்த ‘ரமணா’ யார் கதை என்பது இந்த உலகத்துக்கே தெரியும். அந்த வரிசையில் கஜினி, கத்தி படங்களும் அடங்கும்.

இயக்குநர் பிரியதர்ஷனை குறைசொல்வதற்கு எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை. அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று இயக்குநர் பிரவீன்காந்த் கூறியுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon