மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

நிலக்கரி ஏலத்துக்குத் தயாராகும் கோல் இந்தியா!

நிலக்கரி ஏலத்துக்குத் தயாராகும் கோல் இந்தியா!

நீண்டகால அடிப்படையில் மின் துறைக்கு நிலக்கரி சப்ளை செய்வதற்கான ஏலம் நடத்துவதை எதிர்நோக்கியிருப்பதாக கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோல் இந்தியா நிறுவனம், பொதுத்துறையைச் சேர்ந்த நிலக்கரிச் சுரங்க நிறுவனமாகும். நிலக்கரி உற்பத்தியில் சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும் அதன் துணை நிறுவனங்களும் சுமார் 80 சதவிகித பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்நிலையில், நிலக்கரி சப்ளைக்கான ஏலத்துக்குத் தயாராகிவரும் கோல் இந்தியா நிறுவனம், அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறது. நிலக்கரி ஏலம் தொடர்பான கொள்கைகளை அரசு வகுத்துவரும்நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் ஏலத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கோல் இந்தியா நிறுவனத்தின் மூத்த செயலதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அரசு மின் துறைக்குத் தேவையான நிலக்கரி சப்ளை செய்வதற்கான ஏலத்தின் கொள்கைகளை வகுப்பதில் அரசு இறுதிக்கட்ட ஆலோசனையில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அக்கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியானவுடனே நாங்கள் ஏலத்தைத் தொடங்கிவிடுவோம். கொள்கை விவரங்கள் பற்றித் தெரிந்தால் மட்டுமே ஏலத்துக்கான நிலக்கரி அளவு குறித்து தெரியும். அதேநேரம், மின்சாரத் துறை தவிர்த்து பிற துறைகளுக்கு 40 லட்சம் டன் அளவிலான நிலக்கரியை ஏலத்தில்விட முடிவு செய்துள்ளோம். மேலும் இந்தாண்டில் எங்களது உற்பத்தி இலக்கை அடையும்வகையில், வழக்கமான மின்னணு முறையிலான ஏலத்தில் 1.30 கோடி டன் அளவிலான நிலக்கரியை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறினார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon