மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தள்ளிப்போகும் சமந்தாவின் திருமணம்!

தள்ளிப்போகும் சமந்தாவின் திருமணம்!

சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம், விஷாலுடன் 'இரும்பு திரை', விஜய் சேதுபதியுடன் 'அநீதி கதைகள்', இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தாவுக்கும், நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. திருமண ஏற்பாடுகளில் இருவரின் பெற்றோர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமணத்தை அக்டோபர் மாதத்துக்கு திடீரென்று தள்ளிவைத்து உள்ளனர். இதனை நாகசைதன்யாவின் உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த படங்களை அக்டோபர் மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டு உள்ளார். சமந்தாவின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்களை வைத்து எளிமையாக நடந்தது. அதனால் திருமணத்துக்கு தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த முன்னணி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க முடிவு செய்து உள்ளனர்.

பாலி தீவு அல்லது பாங்காக்கில் இவர்கள் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவையும் கைவிட்டு விட்டனர். ஐதராபாத்திலேயே திருமணம் நடக்க உள்ளது. சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து- கிறிஸ்தவ முறைப்படி இரண்டு முறை இந்த திருமணம் நடக்க இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

நாகார்ஜுனாவின் இளைய மகனான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரேயா என்பவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து திடீரென்று திருமணத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் தனது திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சமந்தா அவசரம் காட்டி வந்த நிலையில், தற்போது அவரது திருமணமும் தள்ளிப்போய் இருக்கிறது. விரைவில் சமந்தாவின் திருமணம் எப்போது என்று முழுத்தகவல் வெளியாகும் என்கிறார்கள் நாக சைதன்யாவின் உறவினர்கள்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon