மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஐ.பி.எல். 2017 : 10 விக்கெட்டும் முக்கியம்!

ஐ.பி.எல். 2017 : 10 விக்கெட்டும் முக்கியம்!

ஐ.பி.எல். போட்டியின் 23வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை சொந்த மண்ணில் 2 ஆட்டத்திலும் வென்றுள்ளது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் அந்த அணி உள்ளது. கேப்டன் காம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, சுனில் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக இருப்பது கொல்கத்தாவின் பலமாக கருதப்படுகிறது.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் கலக்கிய குஜராத் லயன்ஸ் தற்போது மோசமான நிலையில் உள்ளது. 1 வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியுடன் விளையாடிய முதல் போட்டியில் தனது சொந்த மண்ணில் 10 விக்கெட்டில் மோசமான தோல்வியைச் சந்தித்தது குஜராத் லயன்ஸ் அணி. அதற்கு பதிலடி கொடுக்கும்விதத்தில் இன்றைய போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெய்னா, மேக்கல்லம், ஆரோன் பிஞ்ச், வெய்ன் சுமித், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இருப்பினும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படவேண்டிய நிலையில் குஜராத் அணி உள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon