மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

நெடுவாசல் போராட்டத்தைத் தூண்டியது பயங்கரவாத இயக்கங்களே : ஹெச்.ராஜா

நெடுவாசல் போராட்டத்தைத் தூண்டியது பயங்கரவாத இயக்கங்களே : ஹெச்.ராஜா

நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டிவிடுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயலும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் விவசாயிகள், மாணவர்கள் என அனைவரும் தொடர்ந்து போராடினார்கள். எனவே, இந்தத் திட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பின்னர், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு அண்மையில் ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து, மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் நெடுவாசல் மக்கள்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை (இன்று) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள்தான் தூண்டிவிடுகின்றன. மக்கள் ஏற்றால் மட்டுமே ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்படும். ஆனால் தற்போது இந்தப் போராட்டத்துக்கு பயங்கரவாத இயக்கங்கள் காரணம். மக்கள் இதைப் புரிந்துகொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர், தமிழக அரசியலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை பற்றி பேசிய அவர், சசிகலாவுக்கு துணையாக டி.டி.வி.தினகரனும் விரைவில் சிறைக்குச் சென்றுவிடுவார் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon