மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ராகுல் காந்தி மீது விமர்சனம் : பெண் நிர்வாகி நீக்கம்!

ராகுல் காந்தி மீது விமர்சனம் : பெண் நிர்வாகி நீக்கம்!

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வழிநடத்த தகுதியற்றவர் எனக் கூறிய பெண் நிர்வாகி பார்கா சுக்லா சிங்கை, இன்று காலை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரான பார்கா சுக்லா சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை நடத்த மனதளவில் தகுதியற்றவர் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரான அஜய் மக்கான், பெண்களிடம் தவறாக நடக்கிறார். இம்மாதிரியான பாலியல் துன்புறுத்தல்கள் கட்சிக்குள் நடப்பதை ராகுல் காந்தி கண்டுகொள்வதே இல்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸின் ஒழுங்குமுறை குழு பெண் நிர்வாகி பார்கா சுக்லா சிங்கை காங்கிரஸிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளனர். இதேபோல், சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்விந்த் சிங் லவ்லி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon