மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தொண்டர்கள்தான் கட்சியின் சொத்து : மம்தா பானர்ஜி

தொண்டர்கள்தான் கட்சியின் சொத்து : மம்தா பானர்ஜி

தொண்டர்கள்தான் கட்சியின் சொத்து; தலைவர்கள் அல்ல என்று, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மாநகரின் நேதாஜி உள்விளையாட்டரங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. சுமார் 10,000 நிர்வாகிகள் மைதானத்தில் கூடி வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, 'தலைவர் பொறுப்பு வேறு யாரிடமாவது கொடுக்கப்பட்டிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன. கட்சியின் தொண்டராக இருக்கவே விரும்புகிறேன். ஏனெனில், தொண்டர்கள்தான் கட்சியின் சொத்து. தலைவர்கள் அல்ல' என்று தெரிவித்தார்.

மம்தா, கடந்த 1998ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கடைசியாக, கடந்த 2011ஆம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சித் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon