மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

இரட்டை இலை வழக்கு : ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்!

இரட்டை இலை வழக்கு : ஆவணங்கள் தாக்கல் செய்ய  கூடுதல் அவகாசம்!

இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமைகோரும் வழக்கு தொடர்பாக அதிமுக-வின் இரு அணிகளுக்கும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவையடுத்து, அதிகாரப் போட்டியால் அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் முறையிட்டன. ஆனால் தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் அதற்குள் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது எனக் கூறி இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. இதனால் இரு அணிகளும் தொப்பி, இரட்டை மின்விளக்கு ஆகிய சின்னங்களில் போட்டியிட்டன. ஆனால் அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தற்போது இரு அணிகளும் இணையும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இதற்கிடையே, ஏப்ரல் 21ஆம் தேதி இரட்டை இலை விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி தேர்தல் ஆணையத்தில் வந்தது.

அதில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இரு அணிகளும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய இன்னும் 6 வாரங்கள் அவகாசம் வழங்கி, வரும் ஜுன் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon