மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

மேடையில் தூங்கிய முதலமைச்சர்!

மேடையில் தூங்கிய முதலமைச்சர்!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமய்யா விழா மேடையிலேயே தூங்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், மலவள்ளியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் சித்தராமய்யா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றினார். அதையடுத்து, விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர் திடீரென அயர்ந்து மேடையிலேயே தூங்கினார்.

அப்போது அவரது கண்ணாடி கழன்று விழுந்ததால் அவர் கண் விழித்தார். பின்னர், கீழே விழுந்த கண்ணாடியை நரேந்திரசாமி எம்.எல்.ஏ. எடுத்து அவரிடம் கொடுத்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி கன்னட தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று பொதுநிகழ்ச்சியில் சித்தராமய்யா தூங்குவது இதுவொன்றும் புதிதல்ல. ஏற்கனவே சட்டசபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடையே விவாதம் நடைபெற்றபோது சித்தராமய்யா தூங்கிய சம்பவம் நடந்துள்ளது. அப்போது இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon