மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தனுஷ் ‘பெற்றோர்’ வழக்கில் திருப்பம்!

தனுஷ் ‘பெற்றோர்’ வழக்கில் திருப்பம்!

தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நடிகர் தனுஷ் தற்போது முழுவதுமாக வெளிவந்து பெருமூச்சு விட்டுள்ளார். கதாநாயகிகள் உடனான சர்ச்சை, குடும்பப் பிரச்சினை என இறங்குமுகமாக இருந்த நடிகர் தனுஷ் வாழ்க்கையில் தற்போது ஏறுமுகமாக மாறியுள்ளது.

தற்போது அவர் இயக்கி வெளிவந்த திரைப்படமான பவர் பாண்டி பெரும் வெற்றி. வட சென்னை திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்மபம். எனத் தொடர்ந்து நடிகர் தனுஷை தங்கள் மகன் என மேலூர் தம்பதியர் உரிமைகோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என ஒவ்வொரு பிரச்சனையிலிருந்து விடுபட்டு வருகிறார் நடிகர் தனுஷ்.

தனுஷ் தங்கள் மூத்த மகன் எனவும், அவர் மாதந்தோறும் தங்களுக்கு ரூ 65 ஆயிரம் தர உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனுஷின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்ட நிலையில், சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், தனுஷ் தங்கள் மகன் என்று கதிரேசன் - மீனாட்சி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மேலூர் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் தனுஷ் யார் என்று.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon