மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஏற்காட்டில் மரங்களை வெட்டி கடத்தல்!

ஏற்காட்டில் மரங்களை வெட்டி கடத்தல்!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில், தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனத்திலிருந்து ஓக் மரங்களை வெட்டி லாரிகளில் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வகையான மரங்கள், அரிய தாவரங்கள் உள்ள ஏற்காடு மலையில் தனியார் எவரும் மரங்களை வெட்ட அனுமதி இல்லை என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனாலும் சில சமூக விரோதிகள், ஏற்காடு மலையில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டி இரவு நேரங்களில் கடத்தி வருகின்றனர் என்று, ஏப்ரல் 21ஆம் தேதி அப்பகுதி மக்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏற்காடு மலையில், நாள் ஒன்றுக்கு 30 லாரிகள் வரையில் மரங்களை வெட்டி கடத்திவருகின்றனர். இதனால், ஏற்காடு மலையின் பசுமை பாதிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டிய வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்காட்டில் மரங்களை வெட்டி கடத்தப்படும் விவகாரம் சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து, மாவட்ட நிர்வாகம் ஏற்காடு மலையில் மரம் வெட்ட யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அப்படி யாரேனும் மரம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon