மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சென்னை: 4000 நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

சென்னை: 4000 நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

கடந்த இரண்டு வருடங்களாக எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபடாமலும், தங்களுடைய நிலைமை குறித்து அரசுக்குத் தெரிவிக்காத காரணத்தால் இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் நிறுவனங்கள் எந்நேரமும் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

நிறுவனச் சட்டம் 2013 பிரிவு 455யின் படி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபடாத நிறுவனங்கள் தங்களின் நிலைப்பாட்டை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அதாவது, அரசிடம் 'dormant company' (செயலற்ற நிறுவனம்) என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தச் சட்டத்தின் பிரிவு 248-ன் படி, இரண்டு ஆண்டுகளாக எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபடாமல் இருக்கும் நிறுவனங்களையும், அனுமதி பெற்றபின்னும் அடுத்த ஒரு ஆண்டுக்குள் எந்தவித வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடாத நிறுவனங்களின் அனுமதியை ரத்துசெய்யும் அதிகாரம் நிறுவனங்களின் பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களின் நிலைப்பாட்டை அரசுக்குத் தெரிவிக்காத நாடு முழுவதுமுள்ள 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, ’நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகம்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிறுவனப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி மும்பையில் 71,000, டெல்லியில் 53,000, ஹைதராபாத்தில் 40,000, பெங்களூருவில் 22,000, சென்னையில் 4000, கான்பூரில் 7,000, ஜெய்ப்பூரில் 6,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனப் பதிவாளர் அலுவலகம், இந்த 2,50,000 நிறுவனங்களை வருமான வரித்துறை, கலால் வரித்துறை, சேவை வரித்துறை ஆகியவற்றை ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை, நிறுவனப் பதிவாளர் அலுவலகம் நீக்கப்படவுள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் பணியாற்றியிருக்கும் பட்சத்தில், அவர்களின் அனுபவம் பிற நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் இந்த நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon