மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

நெல் கொள்முதல்: ரூ.1,000 கோடி ஒதுக்கீடு!

நெல் கொள்முதல்: ரூ.1,000 கோடி ஒதுக்கீடு!

தெலங்கானா மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சி தாக்கியுள்ளபோதும், இந்த ராபி சீசனில் நல்ல நெல் வளர்ச்சியை அந்த மாநிலம் எதிர்நோக்கியுள்ளது. தெலங்கானா அரசு இந்த ராபி சீசனில் நெல் கொள்முதல் செய்ய ரூ.1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் இந்தப் பருவத்தில் நெல் பயிரிட்டனர். அதற்கேற்ப, கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் நல்ல மழை பெய்தது. இதையடுத்து, ராபி சீசனின் இந்த மாதத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு சீசனிலும் சேர்த்து கூடுதலாக 25 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்திட தெலங்கானா அரசு எதிர்பார்த்தது. மொத்தமாக, 2016-2017ஆம் நிதியாண்டில் 90 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டது. ஆனால் இந்த இரண்டு சீசனிலும் சேர்த்து 56 லட்சம் டன் நெல்லை அம்மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 30.50 லட்சம் டன் நெல்லை மட்டுமே தெலங்கானா அரசு கொள்முதல் செய்திருந்தது. அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக 2013-2014ஆம் நிதியாண்டில் 107.50 டன் நெல் கொள்முதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon