மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஜெர்மனியை மிஞ்சும் இந்தியப் பொருளாதாரம்!

ஜெர்மனியை மிஞ்சும் இந்தியப் பொருளாதாரம்!

இந்தியப் பொருளாதாரமானது, வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் நான்காவது இடத்துக்கு முன்னேறும் என்று, சர்வதேச நாணய நிதியம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபற்றி சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்னடைவைச் சந்தித்துவரும் பிரிட்டன், முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்து வெளியேறுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் வர்த்தகப் பங்குதாரரை பெற முடியாமல் பிரிட்டன் தவித்து வருகிறது. எனவே, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் (2022) உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் பட்டியலில் பிரிட்டன் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்படும்.

மறுபுறம், பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியா ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் நான்காவது இடத்துக்கு முன்னேறும். இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9.9 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்யும். அதேநேரம், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 2 சதவிகிதமாகவும், அடுத்த ஆண்டில் 1.8 சதவிகிதமாகவும் குறையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய காரணத்தால்தான் அந்நாடு பொருளாதார சரிவைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon