மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

கார்டியன் திரைப்பட டிரைலரில் தமிழ்ப் பாடல்?

கார்டியன் திரைப்பட டிரைலரில் தமிழ்ப் பாடல்?

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான guardians of the galaxy திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. மார்வெல் நிறுவனத்தின் மற்ற அனைத்துப் படங்களைப்போல் இந்த திரைப்படத்தையும் வித்தியாசமான திரைக்கதை மற்றும் புதுமையான கதாபாத்திரங்களைக் கொண்டு இயக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருப்பதாக தகவல் வந்ததில் இருந்தே மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் அதிக பயனர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அதன்தொடர்ச்சியாக, புதிய வித்தியாசமான டிரைலர் ஒன்றை மார்வெல் நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அதில், கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான Kasam Paida Karne Wale Ki என்ற திரைப்படத்தின் Jhoom Jhoom Jhoom Baba என்ற பாடல் பின்னணியில் இசைப்பது போல் இந்த டிரைலர் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படமான இதில் ஏன், இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது என்ற கேள்விக்கு, ஹிந்தியிலும் இந்தத் திரைப்படம் வெளியாகவிருப்பதால் இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த திரைக்கதை இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளதால்தான் ஹிந்திப் பாடல் இடம்பெற்றுள்ளது என்றும் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர். மேலே கூறியதுபோல், ஹிந்தி வெர்சனுக்காக இந்த டிரைலர் வெளியானது என்பது உண்மையெனில், தமிழிலும் ரிலீஸ் ஆகவிருக்கும் இந்த திரைப்படத்துக்கு என்ன பாடல் கொண்டு வெளியிடுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அந்த வீடியோவைக் காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

guardians of the galaxy 2 trailer

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon