மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

காந்தியின் அஞ்சல்தலை : ரூ.4 கோடிக்கு ஏலம்!

காந்தியின் அஞ்சல்தலை : ரூ.4 கோடிக்கு ஏலம்!

இந்தியாவில் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் உருவம் பொறித்து 10 ரூபாய் மதிப்பிலான அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன. அவற்றில் ஏரி 'சேவை' முத்திரைகள் கொண்ட ஊத பிரவுன் நிற 13 அஞ்சல்தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இந்த 13 அஞ்சல்தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். அவற்றில் 4 அஞ்சல்தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் தபால்தலை சேகரிப்புத் தொகுப்பில் உள்ளன.

மீதியுள்ள 9 அஞ்சல்தலைகளில் 4 அஞ்சல்தலைகள் ஒரே தாளாக சேர்ந்துள்ளவை. இந்த 4 அஞ்சல்தலைகள் லண்டனில் ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் ரூ.4 கோடியே 15 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இந்த 4 அஞ்சல்தலைகளையும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் அஞ்சல்தலை சேகரிப்பாளர் ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இந்திய அஞ்சல்தலைகள் அதிக விலைக்கு விற்பனை ஆனது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon