மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஒரு நடிகைக்கு முக்கியம் எது? -அதிதி விளக்கம்!

ஒரு நடிகைக்கு முக்கியம் எது? -அதிதி விளக்கம்!

அனைவரது மனதில் தற்போது இடம்பெற்றிருக்கும் நடிகை அதிதி. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் கதாநாயகி. இவருக்காகவே ஒரு முறைக்கு மேல் அந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் பலர் உள்ளனர். தான் ஒரு நடிகையானதற்கு பரதநாட்டியம் மிகவும் கைகொடுத்ததாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். பரதநாட்டியம் என்பது நான் சினிமாவில் நடிப்பதற்காக கற்ற கலை கிடையாது. அந்தக் கலை என்னுடைய வாழ்வை மேம்படுத்தி இருக்கிறது. கலையின் நோக்கம் நம் வாழ்வை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. கிளாசிக்கல் டான்சருக்கு ஒரு சில பண்புகள் இருக்கின்றன.

காலையில் நேரமாக எழுவது, எப்பவும் பரபரப்பாக இயங்குவது, எங்கேயும் சொன்ன நேரத்துக்கு முன்பாகப் போவது, பசி, தூக்கம் மறந்து உழைக்கத் தயாராக இருப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பண்புகள் ஒரு நடிகைக்கு இருக்குமேயானால், இயக்குநரும் தயாரிப்பாளரும் விரும்பக்கூடிய ஒரு நடிகையாக இருப்பார்கள். நடனம், இசை என எப்போதும் கொண்டாட்டமாக இருப்பதுதான் ஒரிஜினல் அதிதி. கலைகளின் கலவைதான் சினிமா என்பதால், நடனம் எனக்கு ரொம்பவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது, என்று நடிகை அதிதி கூறியுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon