மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் செங்கோட்டையன்

கடும் வெயில் காரணமாக புதுச்சேரியில் நாளை முதல் அனைத்துப் பள்ளிகளையும் மூட புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், 31இல் தேர்வுகள் முடிந்தன. பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு இன்று தேர்வுகள் நிறைவடைகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு ஏப்ரல், 29ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைவதாக இருந்தது. ஆனால் கோடைவெயில் தாக்கத்தால், ஆறு வயது முதல் 14 வயது வரையுள்ள சிறு வயது மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, முன்கூட்டியே விடுமுறை அளிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பின் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வு முடிந்து நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கும்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon